2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

குப்பைகள் கொட்டுவதற்கு வேறு இடம்

நடராஜன் ஹரன்   / 2017 நவம்பர் 16 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட குப்பைகள், கண்ணகிபுரம் பகுதியிலேயே கடந்த காலங்களில் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு வந்தன. எனினும், யானைகளின் வருகையினாலும் மக்களது எதிர்ப்பினாலும் குப்பைகள் தற்போது, பள்ளக்காட்டுப் பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன

மக்களது வேண்டுகோளைச் செவிசாய்த்து, ஆலையடிவேம்பு பிரதேச செயலக செயலாளர், இப்பிரச்சினையை தமது மேலதிகாரிக்குத் தெரியப்படுத்தினார்.

இதற்கமைய, மாவட்ட உதவி ஆணையாளரின் அறிவுரையுடன், பள்ளக்காட்டுப் பகுதியில் தற்காலிகமாகக் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன

எனினும்,  தற்போது தற்காலிகமாகக் கொட்டப்படுவதை நிரந்தரமாக மாற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .