Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Editorial / 2022 ஜனவரி 26 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
அம்பாறை - தீகவாபி, பள்ளக்காடு கிராமத்திலுள்ள குப்பை மேட்டிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட மேலும் இரு யானைகள் அண்மையில் இறந்துள்ளதாக, அம்பாறை மாவட்ட வன விலங்கு கால்நடை மருத்துவர் டொக்டர் நிஹால் புஷ்ப குமார தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த 8 வருடங்களில் குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருள்களை சாப்பிட்டு 20 யானைகள் இறந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திறந்தவெளிக் குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக், பொலிதீன் கழிவுகள் தேங்குவதே இதற்குப் பிரதான காரணம் எனத் தெரியவருகின்றது.
இறந்த யானைகளை பரிசோதித்த போது, குப்பை மேட்டில் இருந்து பெருமளவிலான அழியாத பிளாஸ்டிக் பொருள்களை விழுங்கியுள்ளதாகவும் யானைகள் சாப்பிட்டு ஜீரணிக்கும் சாதாரண உணவு எதுவும் அங்கு தெளிவாகத் தெரியவில்லை எனவும் வனவிலங்கு கால்நடை மருத்துவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago