2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கொள்கை விளக்கம்

Editorial   / 2018 மே 27 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

“வேற்றுமைகளை களைந்து ஒற்றுமைப்படுவோம்” எனும் தொனிப் பொருளில், கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் அபிவிருத்தியை வெற்றி கொள்ள வேண்டுமானால் அனைத்துக் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு ஒரு பொதுச் சின்னத்தில் களமிறங்கி தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும். இதனை முன்னெடுக்கும் நோக்கில், திருக்கோவில் பிரதேச புத்திஜீவிகளுடனான கொள்கை விளக்கம் தொடர்பான கூட்டம், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு திருக்கோவில் விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுல மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நாட்டில் தமிழர்களுக்கான ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் துன்பப்படும் கிழக்கு வாழ் தமிழ் மக்களை பாதுகாக்கும் வகையில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஊடாக கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்குப் பாடுபடக்கூடிய கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் மயப்படுத்தப் பெற்றதும், வினைத்திறன் மிக்கதமான பொதுவான பலமான தமிழ் மக்கள் அமைப்பொன்றை தோற்றுவித்து கிழக்கு மாகாணத் தமிழர்கள் தங்களைத் தற்காத்துக் கொண்டு தமிழர்களின் எதிர்கால இருப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை கட்டியெழுப்புவதே இவ்வமைப்பின் நோக்கமாக அமைந்திருக்கின்றது.

இக்கூட்டமானது, மாகாண இணைப்பாளர்களின் ஒருவரான செங்கதிரோன் த.கோபாலக்கிருஷ்ணனின் தலைமையில் இடம்பெற்றதுடன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு பீடத்துக்கான விரிவுரையாளர் வைத்தியகலாநிதி கே.அருளானந்தம், மட்டக்களப்பு விபுலானந்தா அழகியற் கற்கை பீடத்தின் விரிவுரையாளர் சிவரெத்தினம் சுந்தரம்பிள்ளை முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.செல்வராசா, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சிரேஷ்ட வைத்தியர் வைத்தியகலாநிதி  எம்.தமிழ்தாசன், ஆயூர்வேத வைத்திய கலாநிதி அரசரெட்ணம் தமிழ்நேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, திருக்கோவில் பிரதேசத்தில் 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான செயற்பாட்டார்கள் 22 பேர் தெரிவும் இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .