Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
ஒலுமுதீன் கியாஸ் / 2018 மே 27 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில், டெங்கு நோய் பரவலாகக் காணப்படுவதால், கொழும்புக்குச் சென்று வருபவர்களும் நோன்புப் பெருநாள் அங்காடி வியாபாரத்துக்காக வரும் வெளியூர் நபர்களும் தங்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், தாமதமின்றி அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என, கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.அஜீத் தெரிவித்தார்
கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அலுவலகப் பிரிவினுடைய டெங்கு கட்டுப்பாட்டு செயற்குழுவின் அவசரக் கூட்டம், இன்று (27), பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரை, மூன்று டெங்கு நோயாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளனர்.
“2017ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், மிகப் பெரிய டெங்கு அனர்த்தம் ஒன்று கிண்ணியாவில் ஏற்பட்டது. இதனால், எமது பகுதியில் 14 பேர் பலியானார்கள். பலத்த போராட்டங்களுக்கு மத்தியில், பல்வேறு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களைத் திட்டங்களை முன்னெடுத்து, ஏப்ரல் மாதம் கடைசிப் பகுதியில் டெங்கு நோயை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம்.
“ காரணமாக 2017ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2017ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையும், 15 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில், 2 பேர் மாத்திரமே உள்ளூரிலிருந்து டெங்கு நோய்க்கு ஆளாகியவர்கள். ஏனைய 13 பேரும், கொழும்பு போன்ற வெளிமாவட்டங்களுக்குச் சென்று, டெங்கு நோய்க்கு உள்ளாகியவர்கள்.
“அத்தோடு, இந்த வருடம் இனங் காணப்பட்ட அந்த மூன்று நோயாளிகளும், கொழும்புக்குச் சென்று டெங்கு நோய்க்கு ஆளாகியவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது” என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago