Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஊறணி கனகர் கிராமத்து மக்கள், தமது சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்துமாறு, கடந்த செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பித்த கவனயீர்ப்புப் போரட்டம், ஒன்பதாவது நாளாகவும் இன்று (22) தொடர்ந்தது.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து, கோமாரி, திருக்கோவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தனர். யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில், தமது சொந்த இடமான ஊறணி கனகர் கிராமத்துக்குத் திரும்பியபோது, அப்பிரதேசம், வனவிலங்கு இலாகாவுக்கும் இராணுவக் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டிருப்பதாகத் தெரிவித்து, மக்களை, மீளக் குடியேறவிடாமல் தடுத்து வருவதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
1979ஆம் ஆண்டு, காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் மாவட்ட செயலாளரால் வழங்கப்பட்டதோடு, விவசாயச் செய்கைக்கான அனுமதிப்பத்திரங்கள் என்பனவும் ஆவணமாக உள்ளன எனத் தெரிவிக்கும் மக்கள், எனவே, தங்களது நிலத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கு தாங்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்துக்கு, நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை போராடவுள்ளதாகவும், தங்களது இடத்துக்கு மாவட்ட செயலாளர் வருகைதந்து, சாதகமான பதிலை வழங்க வேண்டுமெனவும் கோருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago