2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

களை நாசினிகளை விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது

Editorial   / 2018 மே 26 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

சம்மாந்துறைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான களை நாசினிகளை விற்பனை செய்வதற்கு முயன்ற 03 நபர்கள், இன்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார் தெரிவித்தார்.

நவகம்புர பிரதேசத்திலிருந்து திருடப்பட்டு சட்டவிரோதமாக லொறி ஒன்றின் மூலம் சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான களை நாசினிகள் கொண்டுவரப்பட்டு, அதில் 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு முற்பட்ட போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .