Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 மே 12 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்ககழக கல்விசாரா ஊழியர்கள், இன்று (12) தொடக்கம் 48 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்ககழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம்.நௌபர் தெரிவித்தார்.
கொழுப்பு, காலி முகத்திடல் மக்கள் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கண்டித்து இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அகில இலங்கை பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் 48 மணிநேர தொடர்ச்சியான அடையாள பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் பட்சத்திலும் இப் பணிப் பகிஷ்கரிப்பு தொடர்ச்சியாக 48 மணி நேரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .