2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வு

Editorial   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனை மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான  முதலாவது அமர்வு, நேற்று (2) பகல், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்றது.

41  உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையின், இந்த அமர்வில், சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 9 பேரும், தேசிய காங்கிரஸ் கட்சி  உறுப்பினர் ஒருவரும் தவிர்ந்த, ஏனைய 31 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதில் கல்முனை மாநகர சபையின் முதல்வராக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட  ஆதம்பாவ முகம்மது ரஹீப், 22  உறுப்பினர்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதி  முதல்வராக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக் கட்சி உறுப்பினர் காத்தமுத்து கணேஸ் 15 உறுப்பினர்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X