Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
பி.எம்.எம்.ஏ.காதர் / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் நாடு முழுவதிலும் மாவட்டச் செயலகங்களில் கட்டுப்பணத்தைச் செலுத்தி வருகின்றன.
இதன்னடிப்படையில், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்துக்கான கட்டுப்பணம், அம்பாறை மாவட்டச் செயலகத்தில் செலுத்தப்படுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குளுக்களும், அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நேற்று (13) கட்டுப் பணத்தைச் செலுத்தின.
நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக, திருக்கோயில், நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளுக்கும் கல்முனை மாநகர சபைக்கும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
மேலும், தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் தலைமையில், அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகியவற்றுக்கும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
அத்தோடு, கல்முனை மாநகர சபைக்காக, மருதமுனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.அனஸ் தலைமையிலான சுயேட்சைக் குழுவும் கட்டுப்பணத்தைச் செலுத்தியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago