2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

கஞ்சிகுடிச்சாற்றில் கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயம்

Editorial   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுகுட்பட்ட கஞ்சிகுடியாறு காட்டுப் பிரதேசத்தில் கரடி தாக்கியதில் ஆண் ஒருவர் படுகாயமடைந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை (19) காலை 10 மணியளவில் விறகு சேகரிப்பதற்காக காட்டுக்குள் சென்றிருந்த வேளையில் கரடி தாக்கியுள்ளதுடன் முகம், கண்கள், கைகள் போன்றவற்றில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

  கரடியின் தாக்குதலுக்கு உள்ளானவரை திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று,  அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளானவர் திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தினைச் சேர்ந்த 40 வயதுடைய வடிவேல் தனராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .