Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Editorial / 2022 ஜனவரி 30 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
ஒமிக்ரோன் பிறழ்வாக திரிபடைந்துள்ள கொரோனா வைரஸ் நாட்டில் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ள சூழ்நிலையில், மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் அசமந்தப்போக்குடன் செயற்படுவதானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.
ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று வீதமும் மரண வீதமும் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; “தற்போது மூன்றாவது தடுப்பூசியைப் பெறுகின்ற விடயத்தில் மக்கள் ஆர்வம் காட்டாமல், பின்னடிக்கின்ற நிலைமையைப் பார்க்க முடிகிறது.
“இது ஒமிக்ரோன் பரவளின் பாரதூரத்தை புரிந்துகொள்ளாத தன்மையைக் காட்டுகின்றது. குறிப்பாக எமது பிராந்தியத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் பெரும் அலட்சியம் காட்டப்படுகிறது.
“கடந்த வெள்ளிக்கிழமை (28), நாட்டில் 934 பேருக்கு கொரோனா தொற்றியுள்ள நிலையில், அவர்களுள் 300 பேர் கிழக்கு மாகாணத்தவர்களாவர். அவ்வாறே 27 மரணங்களில் 04 பேர் கிழக்கு மாகாணத்தவர். இதிலிருந்து தற்போது எமது பிராந்தியத்திலும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக பரவி வருகின்றது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
“கொரோனா ஒழிந்து விட்டது என்று எவரும் நினைக்க வேண்டாம். முதலாம், இரண்டாம் அலையின்போது இருந்த அச்சம் இப்போது முற்றாக நீங்கி, எல்லாவற்றையும் மறந்து செயற்படுகிறோம். அடிப்படை சுகாதார நடைமுறைகளைக் கூட கடைப்பிடிக்க தவறி நிற்கின்றோம். இது பேராபத்தையே கொண்டு வந்து சேர்க்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
“கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பதன் மூலமே கொரோனாவை எமது நாட்டில் இருந்து ஒழிக்க முடியும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago