2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

ஐஸ்ஸுடன் தாய் , மகன் கைது

Janu   / 2024 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான் சேனை பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை(30) மாலை  ஐஸ் போதை பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இறக்காமம் விசேட புலனாய்வு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இறக்காமம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே. எம்.மஹிந்த சேனரத்ன   வழிகாட்டலுக்கு அமைவாக விசேட புலனாய்வு பொறுப்பதிகாரி ஜே.எம். பி.கலந்த சூரிய தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  6 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் குறித்து இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில்  வைக்கப்பட்டுள்ளதுடன்   அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .