2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் நிலையத் திறப்பு விழா

Freelancer   / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

நிந்தவூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத் திறப்பு விழா, சங்கத்தின் தலைவர் ஏ. சஹீத் அஹமட் தலைமையில் இன்று (17) நடைபெற்றது.

நவீன மயப்படுத்தப்பட்ட இவ் எரிபொருள் நிரப்பு நிலையத் திறப்பு விழாவுக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைஷல் காசிம் மற்றும் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் என்.சிவலிங்கம் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு, எரிபொருள் நிலையத்தினை திறந்து வைத்தனர்.

இதன்போது புதிதாக திறந்து வைக்கப்பட்ட எரிபொருள் நிலையத்தின் மூலம் நிந்தவூர் பிரதேச விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை முன்னெடுப்பது தொடர்பில் விஷேட கருத்துரைகள்  இடம்பெற்றன.

இந்நிகழ்வின்போது நீண்ட காலமாக சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள சிரேஷ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ஜப்பாரின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், நிகழ்வின் அதிதிகளும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

நிந்தவூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் சேவையாற்றி மரணித்தவர்களின் ஈடேற்றம் வேண்டி இதன்போது விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றதுடன், அவர்களின் கடந்த கால சேவைகள் தொடர்பிலும் இதன்போது நினைவு படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக பிரிவில் உள்ள 12 பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் ஐந்து பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்கி வருகின்ற நிலையில் இப்பிராந்தியத்தில் ஆறாவது எரிபொருள் நிரப்பு நிலையமாக இவ் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X