2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

ஊடக டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Freelancer   / 2022 ஜூன் 12 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017/18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா (Diploma in Journalism) பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(12) காலை 09.00 மணிக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் கலாநிதி ஏ. சண்முகதாஸ்  Zoom  தொழிநுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டு பிரதான உரை நிகழ்த்தினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயிற்சிநெறியானது, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக சில வருடங்கள் காலதாமதமானதுடன், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடந்த வருடம் இதற்கான இறுதிப் பரீட்சை இடம்பெற்றிருந்தது.

இதில் 41 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன்,  இரு மாணவர்கள் இதில் அதி விஷேட ((Distinction) சித்திகளைப் பெற்றிருந்தனர்.

இதேவேளை இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவரும், இப்பயிற்சி நெறியின் இணைப்பாளருமான பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் தலைமைப் பேராசிரியரும், வெளிவாரி கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளருமான பேராசிரியர் எம்.எச் தௌபீக் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட இப்பயிற்சி நெறியின் அனைத்து வளவாளர்களும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X