2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

இலவச அரிசி விநியோக வேலைத்திட்டம்

Freelancer   / 2023 மார்ச் 27 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

போசாக்கு மட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத் திட்டத்திற்கமைய அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் வீ்.ஜெகதீசன் தெரிவித்தார்.

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுக்கமைய நாடு தழுவியரீதியில் இலவசமாக அரிசி விநியோகிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் 2022/23 பெரும் போகத்தில் கிடைக்கப்பெற்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து பிரதேச செயலக ரீதியாக கொள்வனவு செய்து, பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு ஊடாக தெரிவுசெய்யப்பட்ட சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலமாக நெல்லை அரிசியாக மாற்றி, இவ் அரிசியை பிரதேச செயலகங்கள் ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமூர்த்தி பயனாளிகள், சமூர்த்தி கொடுப்பனவுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவு பெறுவோர், விசேட தேவையுடையோர் ஆகியோருக்கு இலவசமாக அரிசி விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இரண்டு மாதங்களுக்கு தலா 10 கிலோகிராம் அரிசி என்ற அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X