Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 நவம்பர் 08 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 13 வயதான மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம்தில் 8 ம் ஆண்டில் கல்வி கற்றும் இரு மாணவர்களுக்கிடையே பாடசாலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அதிலொரு மாணவனின் வாயால் நுரை வெளிவந்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அந்த மாணவன் உயிரிழந்துள்ளான்.
இன்று (08) செவ்வாய்க்கிழமை பகல் 1.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த திருக்கோவில் பொலிஸார்,
தம்பிலுவில் ஏ.பி.சி வீதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிவபாலன் கிசாஷhந் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தெரியவருவதாவது
குறித்த பாடசாலையில் ஒரே வகுப்பில் இருமாணவர்களும் கல்விகற்றுவருகின்றனர் இந்த நிலையில் சம்பவதினமான இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை முடிவடைகின்ற நேரத்தில் உயிரிழந்த மாணவன் வகுப்பறை மேசையில் பெயின்றால் கீறியுள்ளார்.
சகமாணவனின் கை அந்த பெயின்றில் பட்டதுடன் கீறப்பட்டு இருந்ததும் அழிந்துவிட்டது. இதனையடுத்தே இவ்விருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில், மரணமடைந்த மாணவன் வகுப்பறைக்குள் வைத்தே வாயில் நுரை தள்ளியுள்ளார்.
மாணவனை தாக்கிய சக மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் இருவரும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அறியமுடிகின்றது.
உயிரிழந்த மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக தெரிவித்த திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
இதேவேளை அந்தபகுதி மக்கள் வைத்தியசாலையில் திரண்டுள்ளதுடன் இந்த பகுதியி பெரும் சோகம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது (கனகராசா சரவணன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
31 minute ago
34 minute ago
54 minute ago