Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 05 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில், அக்கரைப்பற்று 241ஆம் இராணுவ படைப்பிரிவு முகாமின் தேனீர் சாலை முன்பாக இன்று (05) அதிகாலை கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இக்கார் வீதியை விட்டு விலகி, வீதி அருகில் இருந்த சிறிய தூண்களை உடைத்துக்கொண்டு, அருகில் இருந்த சிறிய பள்ளமான பிரதேசமொன்றில் தலை கீழாக வீழ்ந்து கிடப்பதை காண முடிந்தது.
காரின் இரு பக்க இலக்கத்தகடுகளும் காணப்படாத நிலையில், காரின் முன்பகுதி மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதையும் காரின் சில பாகங்கள் சிதறி கிடப்பதையும் அவதானிக்க முடிந்தது.
இதில் பயணம் செய்தவர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார், இன்று காலை குறித்த இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
23 minute ago
1 hours ago