Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை இராணுவப் படைப்பிரிவின் 56ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இராணுவத்தினர் ஏற்பாடு செய்த இராணுவ அணிநடை கண்காட்சி, அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று (06) நடைபெற்றது.
இராணுவத்தின் ஒழுக்கம், நேர முகாமைத்துவம், தலைமைத்துவம் போன்ற நற்பண்புகளை, பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையிலும், எதிர்வரும் 10ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் இராணுவ ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டும், குறித்த அணிநடை கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை இராணுவத்தின் 24ஆவது படைப்பிரிவின் மேஜர் ஜென்ரல் மஹிந்த முதலிகேவின் பணிப்புரையின் கீழ், அக்கரைப்பற்று இராணுவ முகாம் கட்டளையிடும் அதிகாரியும் 241ஆம்,242ஆம் படைப்பிரிவுகளுக்குப் பொறுப்பானவருமான கேணல் விபுல சந்திரசிறியின் ஒழுங்கமைப்பில் இந்த அணிவகுப்பு இடம்பெற்றது.
அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயராம விகாரையில் இருந்து ஆரம்பமான அணிநடை கண்காட்சி, அக்கரைப்பற்று சந்தை சதுக்கத்தின் ஊடாக மணிக்கூட்டுக் கோபுரத்தை அடைந்து, அங்கிருந்து கல்முனை பிரதான வீதியூடாக தொழில்நுட்ப கல்லூரியை அடைந்து நிறைவுற்றது.
அணிநடை கண்காட்சியில் 23ஆம் படைப்பிரிவின் சிங்கபா ரெஜிமென்ட் 3ஆம் படைப்பிரிவின் விஜயபா ரெஜிமென்ட், 8ஆம், 11ஆம்,16ஆம் படைப்பிரிவுகளின் இலங்கை காட் பட்டலியன் உள்ளிட்ட இராணுவ அணிகள் பங்கேற்றன
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago