2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஆயுள்வேத மத்திய மருந்தக நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வி.சுகிர்தகுமார்   / 2018 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதேச வைத்தியத் துறையை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயுள்வேத மத்திய மருந்தகம் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, ஆலையடிவேம்பு புளியம்பத்தை கிராமத்தில் ஆயுள்வேத மத்திய மருந்தக கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, ஆயுள்வேத வைத்தியர் இ.கோபிநாத் தலைமையில் நேற்று முன்தினம் (30) நடைபெற்றது.

சிவஸ்ரீ குகனேந்திர சர்மா குருக்களின் ஆசியுடனும் பூஜை வழிபாடுகளுடனும் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

47 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் அமையவுள்ள இக்கட்டட நிர்மாணத்துக்கான நிதியை, சுதேச வைத்திய சுகாதார அமைச்சினூடாக வழங்க, கிழக்கு மாகாண ஆயுள்வேத மத்திய நிலையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவிய ஆயுள்வேத மத்திய மருந்தக நிரந்தரக் கட்டடத்துக்கான தேவைப்பாடு இதன்மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .