Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யுமாறு கோரி, பெற்றோர்கள் இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொத்துவில் ஜும்ஆ பள்ளிக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில், பிரதான வீதி ஊடாகச் சென்று பொத்தவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம். முஸரத்திடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், “பொத்துவில் கல்வியைச் சீரழிக்காதே”, “ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கு”, “கல்வி அதிகாரிகளே எமது பிள்ளைகள் மீது பாராபட்சம் காட்டாதே” போன்ற சுலோபங்களை ஏந்திய வண்ணம் சென்றனர்.
பொத்தவில் பிரதேசத்திலுள்ள 21 பாடசாலைகளில் 150 ஆசிரியர்கள் நீண்டகாலமாக பற்றாக்குறையாகப் காணப்படுகின்றது. அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களிலிருந்து 39 ஆசிரியர்கள் எமது பாடசாலைகளில் கல்வி கற்பித்துக் கொண்டுருக்கும் வேளையில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி மூதூர் வலயக் கல்வி பணிப்பாளராக இடமாற்றம் பெற்றுச் சென்ற ஏ.எல்.எம். காஸிமால் கடந்த 2ஆம் திகதி இரவோடு இரவாக ஆசிரியர்களுக்கு இடமாற்றக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தது.
இவ்விடமாற்றங்கள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய, தற்போதைய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமதுலெப்பை இவ்விடமாற்றங்களை இரத்துச் செய்து மீண்டும் அதே பாடசாலைகளுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டிருந்தும் இதுவரை சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கவில்லையெனவும், நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக் குறை நிவர்த்தி செய்யக் கோரியுமே, இவ் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago