Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா எம்.ஏ.றமீஸ், எஸ்.எம்.இர்ஷாத், ரீ.கே.றஹ்மத்துல்லா,எஸ்.கார்த்திகேசு
கடந்த இரண்டு நாள்களாக, அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக, மாவட்டத்தின் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் மழையால், தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்பு வீடுகள், நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், அநேகமான உள்வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, உள்ளூர்ப் போக்குவரத்துகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில், இன்று (09) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்துக்குள், பொத்துவில் பிரதேசத்தில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சி 55.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், அம்பாறை ஹெக்கலஓயாவில் 42.08 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக, பொத்துவில் வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ. நயிம் தெரிவித்தார்.
அதிகமான மீனவர்கள், கடல் கொந்தளிப்புக் காரணமாகக் கடலுக்குச் செல்லாமல் இருப்பதால், கடற்றொழில் பாதிப்படைந்துள்ளதுடன், நன்னீர் மீன்பிடித் தொழிலும் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதெனவும், கடல் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்படுவதுடன், மரக்கறி வகைகளின் விலைகளும் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுவதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சில பிரதேசங்களில் வடிகான்கள் துப்பரவு செய்யப்படாமலுள்ளன எனவும், சில பிரதேசங்களில் இயந்திரங்கள் மூலம் வாய்க்கால்கள் தோண்டப்பட்டுள்ள போதிலும், முறையாக நீர் வழிந்தோடவில்லையெனவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
36 minute ago