Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அரசாங்கத்தால் பிரதேச மட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் மக்களும் பங்குதாரர்களாக மாற வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியைக் கட்டியெழுப்ப முடியும்” என, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட திருக்கோவில் 3 கிராம சேவகர் பிரிவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனின் தலைமையில் நேற்று (19)மாலை இடம்பெற்ற “நிளசெவன” எனும் உத்தியோகபூர்வ இல்லத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, மேற்படி அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
“அரசாங்கத்தின் அபிவிருத்திகள், மக்கள் நலன் கருதியதாகவே அமைந்திருக்கின்றது. ஆனால், கிராமத்தில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் மக்கள் பாராமுகமாகவே இருக்கின்றனர்.
“இதன் காரணமாகவே, முறையான அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது இருப்பதுடன், நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க முடியாத அபிவிருத்தியாகவும் அமைந்து விடுகின்றது.
“மக்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் ஏற்படுமிடத்து சந்தேகங்கள் தொடர்பாக குறித்த அலுவலகங்களுக்குச் சென்று கேள்விகளைக் கேட்டுத் தெளிவுபெறக்கூடிய உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அரசாங்கத்தின் நல்ல நோக்கங்கள் வெற்றிபெற வேண்டுமானால் மக்களின் பங்குபற்றல்கள் அவசியம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago