Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Editorial / 2022 மார்ச் 07 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
பாடசாலை வகுப்புகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டு, சகல வகுப்புகளும் இடையூறின்றி ஏக காலத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி கல்வி அமைச்சருக்கு அவசர மகஜர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார், இன்று (07) தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்;
கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஓரளவு சீர் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டை காரணம் காட்டி பாடசாலைகளில் வகுப்புகளை பிரித்து நடத்துமாறு, கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டிருக்கிறது.
இதனால் மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் மீண்டும் வெகுவாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
கொரோனா காலத்தின் பாதிப்புக்களால் இழந்த கல்வியை மாணவர்கள் இன்னமும் ஈடுசெய்ய முடியாமலும் வகுப்பேற்றம் நடைபெறாமலும் மாணவர்கள் பல்வேறு மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை கல்வி அமைச்சு அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லையென்பது கவலைக்குரியதாகும்.
விடுமுறைக்குப் பின்னர் அரச பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அமைச்சு சகல பாடசாலைகளும் நடாத்தப்பட வேண்டிய முறை பற்றி சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, ஒரு வகுப்பில் 20 க்கு குறைவாக மாணவர்கள் இருப்பின் தினசரி அவ்வகுப்புக்கள் இடம்பெற வேண்டும் எனவும் ஒரு வகுப்பில் 21 முதல் 40 வரையான மாணவர்கள் இருப்பின் அவர்களை இரு குழுக்களாக பிரித்து வாரத்திற்கு ஒரு குழு வீதமும் 40 க்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரு வகுப்பில் இருப்பின் அவர்களை மூன்று குழுக்களாக பிரித்து பொருத்தமான ஏற்பாட்டுடன் வகுப்புக்களை நடாத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர். கபில.சி.பெரேராவின் ஒப்பத்துடன் வெளியிடப்பட்ட கல்விச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மாணவர்களின் கல்வியை இன்னுமின்னும் பாதிப்படையவே செய்யுமென கல்வி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
1 hours ago