Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 ஜூலை 31 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பைஷல் இஸ்மாயில்)
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை பிரிவின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் அதி நவீன கண் சத்திர சிகிச்சை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பொதுமக்களின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஷ் அஷ்ஷூரா, உலமா சபை போன்ற முச்சபைகளின் வழிகாட்டலின் கீழ் பொதுமக்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1 கோடிக்கு மேற்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட கண் சத்திர சிகிச்சை உபகரணங்களை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவர் வைத்தியர் ஏ.இஸ்ஸடீன் தலைமையில் வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு உபகரணத்தொகுதியை வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை பிரிவிற்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அப்துல் வாஜித், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம்ஹனிபா, முச்சபைகளின் பிரதிநிதிகள் உலமாக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள்,வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பள்ளிவாசல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago