Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Princiya Dixci / 2022 ஜூலை 11 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
இன்றைய இறுக்கமான காலகட்டத்தில் ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கின்றது . அநியாயம், அடாவடித்தனம், அதர்மம் ,அயோக்கியத்தனம் அழிந்திருக்கின்றது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
அதேவேளை, இதே நாட்டில் பிறந்து பல்வேறு சொல்லொணா துன்ப துயரங்களை அனுபவித்த தமிழர்களின் நீண்ட கால உரிமைக் குரலுக்கு நீதி கிடைக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டின் சமகால அரசியல் நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் எங்களுடைய இன விடுதலைக்காகவும், நில விடுதலைக்காகவும் ஜனநாயக ரீதியாக இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
“ எமது இந்த அவல குரலும் இந்த கூக்குரலும் வருகின்ற அரசாங்கத்துக்காவது கேட்குமா என்கின்ற கேள்வி எங்களிடம் எழும்புகின்றது.
“உங்களுடைய ஜனநாயக போராட்டத்துக்கு நாங்கள் முழு ஆதரவையும் தந்திருக்கின்றோம். தொடர்ச்சியாக நாங்கள் பெரும்பான்மை இனத்தவர்களோடு வாழ தயாராக இருக்கின்றோம்.
“நாங்கள் தனி நாடு அல்லது இலங்கை ஆட்சி செய்ய வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சுய உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டும்.
“இங்கு கல்வி கற்று படிக்கின்ற ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு உட்பட அனைத்திலும் இனிவரும் காலங்களும் புறக்கணிப்பில்லாமல் எங்களை ஏனைய மனிதர்கள் போன்று நடத்த கொள்ளக்கூடிய ஓர் அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago