2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

அக்கரைப்பற்றில் பெற்றோலுடன் ஒருவர் கைது

Freelancer   / 2022 ஜூன் 30 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (கனகராசா சரவணன்)

அக்கரைப்பற்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் வீடு ஒன்றை புதன்கிழமை (29) முற்றுகையிட்ட போது, அங்கு சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த  35 அரை லீற்றர் பெற்றோலுடன்  ஒருவரை  கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் உளவுத்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய, அக்கரைப்பற்று பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், சம்பவதினமான நேற்று பிற்பகல் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர். இதன் போது அங்கு பதுக்கி வைத்திருந்த 35 அரை லீற்றர் பெற்றோலை மீட்டதுடன் ஒருவரை கைது செய்தனர்.

மேலும், இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X