.jpg)
(ஜிப்ரான்)
கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக விரிவுரையாளரும் பிரபல ஓவியருமான கமலச்சந்திரனின் 'எண்ணங்களில் உணர்வெழுதி' எனும் தலைப்பிலான ஓவிய கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைகழக அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் பிரதம அதிதியாகவும் கிழக்கு பல்கலைகழக பேராசிரியர் சி.மௌனகுரு கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது, சமாதானம், போர், சுனாமி, இயற்கையின் கொடுமை, அடிமைவாழ்வு, யதார்த்தம், பட்டிணி அவலம் உட்பட பல்வேறு எண்ணக்கருக்களில் உருவாக்கப்பட்ட சுமார் 100 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படியுருந்தன.
இக்கண்காட்சியை பெரும் எண்ணிக்கையானோர் பார்வையிட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.gif)