.jpg)
கடன்கள் இல்லை - அவள்
கையில் காசும் இல்லை
ஆனாலும் பிழைக்கத் தெரிந்தவள்
தனிமை, துணிவு
கூட இருக்கும் - அவள்
தன்னம்பிக்கை உறங்குவதில்லை
அமைதி - அவள்
இதயம் பேசும்
மொழியை விளக்குகிறது
சுவாசத்தில் கலந்திருக்கும்
நிகழ்வுகள் - அவள்
ஆயுளை மகிழ்விக்கிறது
அத்தனை
ராத்திரியின் இருள்களும் - அவள்
துன்பத்தை விரட்டுகிறது
திறவாத
இரு விழிகளும் - அவள்
பசுமையை மீட்டுகிறது
துணையாய் வரும்
உற்சாகம் - அவள்
உள்ளத்தை தேற்றுகிறது
உதடுகள்
உரிமையான - அவள்
உறவுகளை உச்சரிக்கின்றன
புதைக்கப்பட்ட
உணர்வுகள் - அவள்
கற்பனையை வளர்க்கின்றது
தூக்கி எறியப்பட்ட அவளை
அவள் துணிச்சலே
வழிநடத்துகின்றது
தூங்க செல்கின்றாள்
துயில்வதற்கு - அவள்
விழிகள் தயங்குகின்றன
அவள் அறையில்
கண் சுழலும் சப்தத்தை
மட்டுமே செவிமடுக்கிறாள்
கவிதை ஆக்கம்:- இளையதம்பி பறக்கத்
.gif)