.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
சிங்கர் கிண்ணத்திற்காக பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்றுவரும் றகர் போட்டித் தொடரில் கண்டி வித்தியார்த்த கல்லூரிக்கும் கொழும்பு கொட்டாஞ்சேனை புனித ஜோசப் கல்லூரிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் கண்டி வித்தியார்த்த கல்லூரி வெற்றி பெற்றது.
கண்டி நித்தவெல றகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் கண்டி வித்தியார்த்த கல்லூரி 41க்கு 31 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களில் 12க்கு 7 என்ற நிலையில் விளையாடிக்கொண்டிருந்த இரு அணிகளும் 20 நிமிட முடிவில் 12க்கும் 12 என்ற நிலையை அடைந்தது. இடைவேளைக்கு சற்று முன்னர் 19க்கு 12 என்ற நிலையில் புனித ஜோசப் கல்லூரி முன்னிலை வகித்தது.
இடைவேளையின் பின்னர் இரு அணிகளும் மாறி மாறி ட்ரைகளை வைத்ததன் மூலம் போட்டி முடியும் தறுவாயில் போது 41க்கு 31 என்ற நிலையில் கண்டி வித்தியார்த்த கல்லூரி வெற்றி பெற்றது.
இதேவேளை, சிங்கர்கிண்ணத்திற்காக கண்டி தர்மராஜ கல்லூரிக்கும் கொழும்பு லும்பினி கல்லூரிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற றகர் போட்டியில் 104 புள்ளிகளை பெற்று கண்டி தர்மராஜ கல்லூரி பெற்று வெற்றியீட்டியது.
கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி ஆரம்பமான முதல் விநாடியிலிருந்து புள்ளிகளை பெற்றுக்கொள்ள ஆரம்பித்த தர்மராஜ கல்லூரி இடைவேளையின்போது 52 புள்ளிகளை பெற்றிருந்தது. ஆனால் கொழும்பு லும்பினி கல்லூரி புள்ளிகள் எதனையும் பெறவில்லை.
போட்டியின் இரண்டாம் பகுதியிலும் திறமையாக விளையாடிய கண்டி தர்மராஜ கல்லூரி அணி போட்டி முடிவின்போது 104 புள்ளிகளை பெற்றது. இதன்போதும் லும்பினி கல்லூரி புள்ளிகள் எதனையும் பெறவில்லை. கண்டி தர்மராஜ கல்லூரி 104க்கு 00 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
.jpg)
.gif)