.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியரும் சன்ரைஸ் கழகத்தின் அங்கத்தவருமான கந்தையா குணராசா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமாகினார்.
அன்னார் காலம்சென்ற கந்தையா, அன்னம் ஆகியோரின் அன்பு புதல்வனும், மேரி தெரோசாவின் அன்புக் கணவரும், பிரமிளா, பிரபாகர், பிரதீபா, பிரசாந்தி, பிரகாசினி, பிரவீந்தர், பிரதக்சினி, ஆகியோரின் அன்புத் தந்தையும், யூட், டிலக்சினி, ரோய், தேவகுமார், நிரோசன், ஆகியோரின் மாமனாரும், அகசி, ரீகஸ், நிம்ஸி, எயின்ஸ்சி, ஏரள், சாருகா, எமோரா, பினூசிகா, ஜேக்'கப், ஆகியோரின் பாட்டனுமாவார்.
அன்னாரின் புதவுடல் இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு 19, அந்தோனியார் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இருந்து நல்லடக்கத்திற்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் - குடும்பத்தினர்.
.gif)