சீஷெல்ஸ் நாட்டின் ஜனாதிபதி ஜேம்ஸ் அலிக்ஸ் மிச்சேல், நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஓகஸ்ட் 23 ஆம் திகதிவரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களுடன் சீஷெல்ஸ் ஜனாதிபதி இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
பூகோள திரைச்சீலையில் சிறிய நாடுகளின் பாத்திரம் எனும் தலைப்பில், சர்வதேச விவகாரங்களுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
.gif)
