கிழக்கு மாகாண சபை, ஆளுநரால் ஜூன் 27 ஆம் திகதி கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இம்மனுவின் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புவதற்கு நீதிபதிகள் சிசிர டி ஆப்ரூ, அனில் குணரட்ன, ஏ.டபிள்யூ.ஏ. சலாம் ஆகியோர் கொண்ட குழாம் மறுத்ததுடன் இம்மனுவை தள்ளுபடி செய்தது.
கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ராசையா துரைரட்ணம் இம்மனுவை தாக்கல் செய்திருந்தார். முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஆளுநரான ரியர் அட்மிரல் (ஓய்வு) மொஹான் விஜேவிக்கிரம, மாகாண சபை அமைச்சர்களான எம்.எஸ்.சுபைர், ரி.நவரட்ணம், விமலவீர திசாநாயக்க, சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தயா கமமே, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனக ஈஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மனுதாரர் சார்பில் ஆஜராகினர்.
.gif)
