Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

கல்வி முறைமையிலுள்ள நெருக்கடிகளை தீர்க்குமாறு நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம்


(ஒலிந்தி ஜயசுந்தர)


கல்வி முறைமையில் காணப்படும் நெருக்கடிகளை தீர்க்கும்படி அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை, நாடாளுமன்றத்துக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பங்கேற்றனர்.

கல்வியின் அபிவிருத்தியூடாக நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க பல்கலைக்கழய ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய ஐ.தே.க மற்றும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, புத்திக பதிரண, ரவி கருணாநாயக்க, றுவன் விஜேவர்தன, விஜித ஹேரத், சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் கூறினர்.

இஸட் புள்ளி நெருக்கடி, கல்வி மீதான குறைந்த முதலீடு, பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை, கல்விக் கொள்ளைகளை வகுப்பதில் பல்கலைக்கழக அறிஞர்களை சேர்த்துக்கொள்ளல் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்தை தொடர்நது வலியுறுத்தப் போவதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய பல்கலைக்கழக ஆசிரியர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறினர்.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஜூலை 4ஆம் திகதியிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'இது ஒரு தேசிய பிரச்சினை. இதற்கு தீர்வு காண எமக்கு வெகுஜன ஆதரவு தேவை' என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர் டாக்டர் மென்டிஸ் கூறினார்.

அரசாங்கம் இழுத்தடிப்பதன் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. அரசாங்கத்தின் பாராமுகமான போக்கினால் பல்கலைக்கழக முறைமையில் நெருக்கடி தோன்றியுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் இடையிட்டு கவலையடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். (படங்கள் - பிரதீப் தில்ருக்ஷன)


Views: 864

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.