Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

37 மீனவர்களின் கதி தெரியவில்லை

மட்டக்களப்புக்கு அருகில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 37 சீன மீனவர்களின் கதி தெரியவில்லை. எனினும் இவர்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கை மீனர்வகள் இருவர் பிணையில் செல்வதற்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சீன மீனவர்களையும் பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
எனினும் மேற்படி சீன மீனவர்கள் பொலிஸாரிடம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.

இம்மீனவர்கள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேற்படி 37 சீன மீனவர்களும் இலங்கை மீனவர்கள் இருவரும் மட்டக்களப்புக்கு  கிழக்கே ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Views: 1089

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.