Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 20 ஜூன் 2013

இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளின் இந்திய வருகைக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்

இலங்கையிலிருந்து பாதுகாப்புபடை அதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா வருவதற்கு தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தாம்பரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொண்ட இலங்கை விமானப்படை வீரர்கள் - தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த நான்கு உத்தியோகத்தர்கள் கொழும்பிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து கொல்கத்தா சென்றுள்ளனர். இவர்கள் நான்குமாத இயந்திரவியர் கற்கைநெறியை தொடர்வதற்காகவே கொல்கொத்தாவின் அருகிலுள்ள பரக்பூர் என்னும் இடத்திற்கு சென்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை கேள்வியுற்ற தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதாவே தனது கடும் கண்டனத்தை மீண்டுமொருமுறை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உணர்வுகளை நோகடித்த இலங்கை படைகளுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Views: 1605

By A Web Design

Comments   

 
-0 +0 # ibnuaboo 2012-07-23 21:43
இந்திய ஜனாதிபதித் தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்காத ஜெயலலிதா இனி இப்படிதான் பேசுவார்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.