Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் விபரம் அறிவிப்பு

(றிப்தி அலி)

அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் தேசிய காங்கிரஸ் - அம்பாறை மாவட்டத்தில் 3 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றத்தை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் 5 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு வேட்பாளர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் -  மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் முன்னர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றத்தை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வேட்;பாளர்களும் அம்பாறை மாவட்த்தில் ஒரு வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு வேட்பாளர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவர்களின் பெயர் விபரம் வருமாறு:

அம்பாறை மாவட்டம் - தேசிய காங்கிரஸ்

  1. ஜே.எம். சுபையிர் ஹாஜி – மருதமுனை
  2. எம்.எல்.ஏ. அமீர் (முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) - சம்மாந்துறை
  3. எம்.எஸ். உதுமாலெப்பை (முன்னாள் மாகாண அமைச்சர்) – அட்டளைச்சேனை
  4. சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் - கல்முனை
  5. எம். பதுர்கான் - பொத்துவில்
திருகோணமலை மாவட்டம் - தேசிய காங்கிரஸ்
  1. எச்.எம்.எம். பாயிஸ் (முன்னாள் தவிசாளர்) - கிண்ணியா
  2. நவாஸ் மாஸ்டர் - மூதூர்
அம்பாறை மாவட்டம் - அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
  1. எஸ்.நிஜாமுதீன் - முன்னாள் அமைச்சர்
மட்டக்களப்பு மாவட்டம் - அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
  1. எம்.எஸ். அமீர் அலி (முன்னாள் அமைச்சர்) – ஓட்டமாவடி
  2. ஏ.எம்.சுபைர் (முன்னாள் மாகாண அமைச்சர்) – ஏறாவூர்
  3. பொறியிலாளர் எம்.சிப்லி – காத்தான்குடி
  4. எம். அப்துல் ஹக்கீம் - வாழைச்சேனை
திருகோணமலை மாவட்டம் - அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
  1. டாக்டர் எம். ஹில்மி (கிண்ணியா நகர சபை தவிசாளர்)  - கிண்ணியா
  2. அஷ்ஷெய்க் அப்துர் ரஸாக் - தோப்பூர்
Views: 3855

By A Web Design

Comments   

 
-0 +0 # ibnuaboo 2012-07-18 19:59
சபாஷ் இனி சரியான போட்டிதான்
Reply
 
 
-0 +0 # Mubharrakk Thagha 2012-07-18 20:19
நானும் ஏதோ பெரிய மக்கள் செல்வாக்குள்ளவர்களோ என்று ஆவலுடன் பெயர்களை படித்தேன்.....
Reply
 
 
-0 +0 # HANI 2012-07-18 21:25
நானும் அப்படிதான் நினைத்தன் ..........
Reply
 
 
-0 +0 # Amjath 2012-07-18 22:02
எப்படியாவது எல்லோருமா சேர்ந்து வாக்குகளை பிரிச்சிடுங்க.
Reply
 
 
-0 +0 # Kanavaan 2012-07-18 23:15
இவர்களால் அல்லது இவர்களின் தலைவர்களால் அல்லது மற்றைய முஸ்லிம் தலைவர்களால் முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியுமா?
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.