படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 8 சிங்களவர்கள் உட்பட 109 பேரை திருமலையிலிருந்து 25 கடல்மைல் தொலைவில் கல்குடா கடற்பகுதியில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.இந்த றோலர் படகு நேற்றிரவு திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 13 ஆம் திகதி 41 பேர் திருகோணமலையிலிருந்து 15 கடல்மைல் தொலைவில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக காத்திருந்ததாக கூறப்படும் 18 பேர் சிலாபம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். (அமதொரு அமரஜீவ)
.gif)
