கடந்தவருடம் தனியார் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் மரணமடைந்த சுதந்திர வர்த்தக வலய ஊழியரான ரொஷின் சானகவின் மரணம் தொடர்பான விசாரணை பூர்த்தியடையவில்லை எனவும் அரசாங்கம் வாக்களித்தபடி அவரின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை எனவும் தொழிற்சங்கங்கள் நேற்று தெரிவித்தன.'பொலிஸாரின் தாக்குதலினால் காயமடைந்த பல ஊழியர்களுக்கு இன்னும் நஷ்ட ஈடு கிடைக்கவில்லை. இவர்களால் தமது ஜீவனோபாயத்தை கொண்டு செல்ல முடியாதுள்ளது. இவர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸார் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தொழிற்சங்கங்கள் கூறின.
ரொஷினின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ள போதிலும் அதற்கு அப்பால் எதுவும் நடைபெறவில்லை என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர்கள் சங்கத்தின் செயலாளரான அன்ரன் மார்கோஸ் கூறினார்.
ரொஷினின் குடும்பத்திற்கு 5 மில்லியன் ரூபா வழங்கப்பட வேண்டுமென தமது சங்கம் கோரியதாகவும் அன்ரன் மார்கோஸ் தெரிவித்தார்.
.gif)
