Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
செவ்வாய்க்கிழமை, 21 மே 2013

அரசியல் தீர்வில் இந்திய ஈடுபாட்டின் மற்றொரு படி: மேனனின் விஜயம் குறித்து சம்பந்தன்

                                                                        (கெலும் பண்டார)

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவின் ஈடுபாடு மேலும் நெருக்கமடைவதற்கான ஒரு படியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் சிவ் சங்கர் மேனனின் இலங்கை விஜயத்தை தான் நோக்குவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.

சிவ்சங்கர் மேனனை நேற்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அதன்பின் டெய்லி மிரரிடம் பேசுகையிலேயே இவ்வாறு கூறினார்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தமைக்கான காரணத்தையும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவதிலுள்ள பிரச்சினைகளையும் சிவ்சங்கர் மேனனுக்கு தான் விளக்கியதாக அவர்கூறினார்.

'இவ்விடயம் தொடர்பாக நாம் பிடிவாதமாக இருக்க விரும்பவில்லை. இத்தெரிவுக்குழுவானது அர்த்தபூர்வமாக செயற்பட வேண்டும். எனினும் எமது கரிசனைக்குரிய விடயங்கள் உள்ளன. அவற்றை அற்பமானதாக ஒதுக்கிவிட முடியாது' என அவர்கூறினார்.


Views: 2040

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.