2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பாக தவறான முறையிலான இஸட் புள்ளி கணிப்பை அனுமதித்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவும் உடனடியாக இராஜினமாச் செய்ய வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. கடந்த வருட க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான இஸட் புள்ளி கணிப்பீட்டில் பல தவறுகள் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இஸட் புள்ளி முறையை அறிமுகப்படுத்திய பேராசிரியர் ரல்வ் தட்டில் உட்பட ஒவ்வொருவரும் இதன் தவறை சுட்டிக்காட்டியதாகவும் இருப்பினும் இதனை அலட்சியப்படுத்திய உயர் கல்வி அமைச்சும் கல்வி அமைச்சும் தங்களது விருப்பின் பேரில் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.
சரியான பெறுபேறுகள் கணிப்பிடப்படும்; எனவும் மாணவர்கள் எவரும் இது குறித்து கவலையடைத் தேவையில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார். நடந்த விடயங்கள் அநீதியானவை மற்றும் தவறானவை என உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்;ப்பிற்கு இணங்க நடப்பதனால் உயர் கல்வி அமைச்சரும் கல்வி அமைச்சரும் இராஜினாமாச் செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார். (நிஷான் காசிம்)
.gif)

Comments
RSS feed for comments to this post