Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013

முன்னேஸ்வரம் மிருகவேள்வி தடுக்கக்கோரும் மனு மீதான வாதப்பிரதிவாதம் ஜூலை 27 இல்

                                                                                (எஸ்.எஸ்.செல்வநாயகம்)

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் மிருகவேள்வியைத் தடுக்கக்கோரும் ஆணைகோர் மனு மீதான வாதப்பிரதிவாதங்களை ஜூலை 27ஆம் திகதி எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு நேற்று புதன்கிழமை நீதியரசர்கள் எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் எடுக்கப்பட்டது.

ஸ்ரீபோதிராஜ மன்றம், ஜாதிக சங்க சம்மேளனம், தர்மவிஜய மன்றத் தலைவர் ஒல்கொட் குணசேகர, வண. பண்டிரிப்புவே வினீதா தேரோ, மிருக நலன்புரி நம்பிக்கை நிருவனத் தலைவி இராங்கனி டீ சில்வா, அதன் தர்மகர்த்தா விசாக திலகரத்ன, இலங்கை மிருக பாதுகாப்பு சங்க உதவித் தலைவர் லொறைன் மார்கரைட் பார்தோலொமஸ், அதன் செயலாளர் ஷர்மினி தெசிறீ ரட்நாயக்க மற்றும் ஆறு பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

பொலிஸ் மாஅதிபர், புத்தளம் பிரதிப் பொலிஸ் மாஅதிபர், சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிலாபம் நகரசபை, அதன் தலைவர், ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தாக்களான எம். கனகரத்தினம், காளிமுத்து சிவபாக்கியசுந்தரம் மற்றும் மஹேந்திர சாமி ஆகியோருடன் அகில இலங்கை இந்து மாமன்றம் மற்றும் சட்டமாஅதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Views: 1176

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.