Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

ஆர்ப்பாட்டத்திற்கான உரிமையை பிரிட்டன் மதிக்கிறது

                                                                                     (ஹபீல் பரீஸ்)

பிரிட்டனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கு பிரித்தானிய சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தவறிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு குறித்து கருத்து கேட்டபோது, ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தனது பிரஜைகளுக்குள்ள உரிமையை பிரிட்டன் மதிப்பதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

'ஐக்கிய இராச்சிய பிரஜைகளின் ஆர்ப்பாட்டத்திற்கான சட்டபூர்வமான உரிமையை நாம் மதிக்கிறோம். ஆனால், இது பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையுடன் சமநிலையாக கையாளப்பட வேண்டும்' என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் சாரா மேன் கூறினார்.

பொதுநலவாய வர்த்தக பேரவையின் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராபஜபக்ஷ ஆற்றவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டமை குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதிலளிக்கையில், இந்த உரை இரத்துச் செய்யப்பட்டமை அரசாங்கத்தின் தீர்மானமல்ல எனக் கூறினார்.

 'இது அரசாங்கத்தின் தீர்மானம் அல்லது பொதுநலவாய வர்த்தக பேரவை சுயாதீனமானது.  ஆர்ப்பாட்டத்திற்காக பெரும் எண்ணிக்கையான பொலிஸாரை ஈடுபடுத்துவதானது நகரில் ஏற்படுத்தும் தாக்கத்தை கவனமாக ஆராய்ந்தபின் பொதுநலவாய வர்த்தக பேரவை அத்தீர்மானத்தை மேற்கொண்டது. அத்தீர்மானத்தை நாம் மதிக்கிறோம்' என அவர் கூறினார்.
Views: 2175

By A Web Design

Comments   

 
-0 +5 # aj 2012-06-15 19:09
நன்றி பிரிட்டன் நன்றி மக்களின் உணர்வுக்கு தொடர்ந்து மதிப்பளிப்பதுக்கு
Reply
 
 
-0 +1 # ஆரூரன் 2012-06-16 09:35
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இங்கிலாந்து அரசாங்கத்தின் கொள்கைகள் என்றும் நிலைத்து நிற்கவேண்டும்
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.