Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 11பேர் புத்தளத்தில் கைது

சட்டவிரோதமான முறையில் படகொன்றில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 11பேரை கைது செய்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் என்றும் ஏனைய இருவரும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

புத்தளம் வைத்தியசாலைக்கு பின்புறமாகவுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் மேற்படி 11பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதற்காக நேற்றைய தினம் இவர்கள் அவ்விடத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி அழைத்து வந்த முகவர், பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகவர், மேற்படி நபர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கான கூலியாக ஒருவரிடம் தலா இரண்டு இலட்சம் 7 ரூபா வசூலித்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
Views: 1161

By A Web Design

Comments   

 
-0 +0 # ibnuaboo 2012-06-12 20:12
2 லட்சம் ரூபா அவுஸ்திரேலியா செல்லவா, இடையில் எங்காவது ஒரு ஊரில் இறக்குவதற்கா?
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.