Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வெள்ளிக்கிழமை, 24 மே 2013

சிறிகொத்தவுக்கு புதிய தோற்றம்

                                                                        (யொஹான் பெரேரா, நிஷான் காஸிம்)

ஐ.தே.க. நிர்வாகிகளுக்கான தேர்தலின்போது ஏற்பட்ட மோதலினால் சேதமடைந்த கட்சித் தலைமையகமான சிறிகொத்த புனரமைக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார.

இலங்கையின் புகழ்பெற்ற கட்டிட வடிமைப்பாளர்களில் ஒருவரான மிஹிந்து கீர்த்திரட்ணவினால் இக்கட்டிடம் புனரமைக்கப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். சிறிகொத்தவுக்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக அதன் முகப்புத் தோற்றம் மீள்வடிவமைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். 

ஐ.தே.க. ஸ்தாபிக்கப்பட்ட தினமான செப்டெம்பர் 6 ஆம் திகதி இக்கட்டிடம் திறந்துவைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


Views: 1197

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.