பொன்சேகா எனும் விளக்கு இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி கொடுக்க தயாராகவே உள்ளது. இந்த ஒளியைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் தாராளமாக என்னோடு இணைய முடியும் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா – தமிழ்மிரருக்கு தெரிவித்தார். முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் எனது ஒளி அரசாங்கத்துக்கு தேவைப்பட்டது. தற்போதும் தேவைப்படும் பட்சத்தில் எனது கொள்கைகளை ஏற்று அவர்கள் என்னுடன் இணைந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் இருப்பவர்கள் சுதந்திரமாக எந்தவொரு கருத்தையும் முன்வைக்க முடியாது. பின்வரிசையில் அமர்ந்திருந்த நான் முன்வைக்கும் கருத்துக்களையேனும் அவர்களால் முன்வைக்க முடியாது என்றும் சரத் பொன்சேகா, மேலும் கூறினார்.
.gif)

Comments
RSS feed for comments to this post