(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)
லங்கா இந்தியன் ஒயில் கம்பனி (எல்.ஐ.ஓ.சி.) நிறுவனம் 2003 ஆம் ஆண்டில் செயற்பாடுகளை ஆரம்பித்ததிலிருந்து 10 வருடகாலத்துக்கான வரிவிலக்கை சர்வதேச மத்தியஸ்த சபையொன்றுக்கூடாக பெற்றுள்ளதாக பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு ஏன் வரிவிலக்கு அளிக்கப்பட்டது என ஜே.வி.பி. நாடாளுமன்றக்குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
'அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டும் என 2009 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்திற்கு அரசாங்கம் எழுத்துமூலம் அறிவித்தது. ஆனால் அவர்கள் பிரான்ஸிலுள்ள சர்வதேச மத்தியஸ்த அமைப்பொன்றிடம் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.
அதன்படி, 2003 ஆம் ஆண்டு உள்ளூர் சந்தையில் அவர்கள் நுழைந்தபோது கையெழுத்திட ஒப்பந்தத்தின்படி 10 வருடகாலத்திற்கு அவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இச்சலுகையை அவர்கள் 2013 ஆம் ஆண்டுவரை கொண்டிருப்பர். அதன்பின்னர் அவர்கள் வரி செலுத்த வேண்டும். ஏனைய கொடுப்பனவுகளை தான் அரசாங்கத்திற்கு வழங்குவதாக சர்வதேச மத்தியஸ்த அமைப்பிடம் எல்.ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது' என பிரதியமைச்சர் அபேவர்தன கூறினார்.
.gif)
