இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரீகல் திரையரங்கிற்கு அருகிலுள்ள இலங்கை மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திலிருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரையான வீதியின் ஒருபகுதியை பொலிஸார் மூடியுள்ளனர்.
.gif)
