Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
செவ்வாய்க்கிழமை, 21 மே 2013

அவுஸ்திரேலிய ஹோட்டலுக்கு எதிராக வழக்குத் தொடர கெஹலிய தீர்மானம்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலுள்ள ஹோட்டலொன்றின் மீது வழக்குத் தொடுப்பதற்கு ஊடகத்துறை  அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தீர்மானித்துள்ளார்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் மேற்படி ஹோட்டலில் தங்கியிருந்தபோது தான் கீழே விழுந்து காயமுற்றமை  தொடர்பாகவே அவர் வழக்குத் தொடரவுள்ளார்.

அமைச்சர் கெஹலிய அவுஸ்திரேலியாவிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை இலங்கைக்குத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

"மெல்பேர்னில் நான்  தங்கியிருந்த ஹோட்டல் கோமோவுக்கு எதிராக நான் வழக்குத் தொடரவுள்ளேன். அந்த விபத்திற்கு மேற்படி ஹோட்டல் பொறுப்பேற்க வேண்டும்" என அமைச்சர் ரம்புக்வெல்ல கூறினார்.

கடந்த பெப்ரவரி மாதம் மேற்படி ஹோட்டல் பெல்கனியில் அமைச்சர் ரம்புக்வெல்ல நின்றுகொண்டிருந்தபோது கதவு பூட்டிக்கொண்டமை குறித்து ஹோட்டல் ஊழியர்களுக்கு தெரிவிக்க அவர் முற்பட்டபோது அவர் பெல்கனியிலிருந்து கீழே விழுந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தபோதுஇச்சம்பவம் இடம்பெற்றது. இவ்விபத்தின் காரணமாக அவருக்கு அவுஸ்திரேலிய வைத்தியசாலையொன்றில்  பல சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (எஸ்.ஏ.ஜே)


 

Views: 1398

By A Web Design

Comments   

 
-0 +0 # சுள்ளான் 2012-05-25 14:10
அமைச்சரே விரைவாகத் தாக்கல் செய்யுங்கள்.அப்போதுதான் உண்மையில் என்ன நடந்தது என்பது எங்களுக்கும் தெரிய வரும்
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.