Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
சனிக்கிழமை, 25 மே 2013

சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு பூட்டு போட முயற்சித்த 30பேர் கைது

சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பூட்டு போட்டு மூடுவதற்கு முயற்சி செய்த தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்த 30பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று தமிழகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டவர்கள், திடீரென சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கூடி, அதன் பிரதான வாயிலை மூடி பூட்டு போட முயற்சித்துள்ளனர்.

இவர்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்த பொலிஸார், 30பேரைக் கைது செய்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தமிழ் விடுதலை அமைப்பு, மனித நேய மக்கள் கட்சி, பெரியார் தி.க., சேவ் தமிழ் அமைப்புக்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். (நக்கீரன்)
Views: 2274

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.