பொலன்னறுவை மாவட்டத்தில் அரசியல் செல்வாக்குள்ள 2 ஆலை உரிமையாளர்கள், அரச வங்கியொன்றில் கடனாகப் பெற்ற 300 மில்லியன் ரூபாவை திருப்பி செலுத்தத் தவறியுள்ளனரென பொதுநிறுவனங்களுக்கான நாடாளுமன்றக்குழு விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. இப்பகுதியிலுள்ள விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யவென இக்கடன் வழங்கப்பட்டது. நாளடைவில் வங்கி இக்கடனை அறவிட முடியாக் கடனென அழித்துவிட்டது. நெல் கொள்வனவு செய்வதில் ஆதிக்கம் செலுத்தும் இந்த 2 ஆலை உரிமையாளர்கள் அறுவடை நேரங்களில் வங்கித்துறையிலிருந்து நீண்டகாலமாக கடன் பெற்று வருகின்றனர்.
அரசியலிலுள்ள உயர்மட்டத்தினரின் ஆதரவுடன் தமது கடனை செலுத்தத் தவறியவர்களின் விபரங்கள் கொண்ட சில ஆவணங்களை பொதுநிறுவனங்களுக்கான நாடாளுமன்றக்குழுவுக்கு இந்;த அரசாங்க வங்கி அனுப்பியிருந்தது.
நாம் வங்கி அதிகாரிகளை அழைத்து இந்த செலுத்தப்படாத கடன்கள் பற்றி கேட்டோமென பொதுநிறுவனங்களுக்கான நாடாளுமன்றக்குழு அங்கத்தவரான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறினார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கை இலங்கை மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றின் செலுத்தப்படாத கடன், அறவிட முடியாக் கடன் என்பவை 170 பில்லியனாக அதிகரித்துவிட்டதாக கூறியுள்ளது.
லங்கா புத்திர வங்கியில் செலுத்தப்படாத கடன் 1.5 பில்லியன் ரூபா அளவில் உள்ளது.
பெரிய ஆலை உரிமையாளர்கள் தந்திரமான வழியில் நெல்லின் விலையை நிர்ணயிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றனரென ரவி கருணாநாயக்க கூறினார்.
.gif)
